Sunday, March 22, 2009

ம்ரித்ஞ்சய mandtra

thriyambakam yaja make
sugandhim pushti vardhanam
oorvaruga miva bandhanadh
mrithyor mootchiaam amruthaat

among the three worlds you are the ruler
oh.. frangrant god granting health
like matured cucumber detaches from plant
rescue me from dangers and save me

mrithinjyaaya rudhraya
neela kantaya sambave
amruthesha sarvaya
mahaa devayathe namaha

Friday, December 12, 2008

மன்மோகன் சிங் - மாலெகனுக்கு முன்னும்- மும்பைக்குப் பின்னும் - இடையிலும்

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்

முன் குறிப்பு : இந்தக் கட்டுரை மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு முன்பு எழுதப்பட்டது. இரண்டு பாகமாக எழுதப்பட்டது. இப்போது மூன்றாம் பாகத்தையும் சேர்த்து இருக்கிறேன்.

1)மாலெகனுக்கு முன்

இத்தனை நாட்களாக குளிர் நிலைப் படுத்தப்பட்ட அறையில் சிங்கம் தூங்கிக் கொண்டு இருந்தது. ல௯மி நாராயணன் கோவில், இஸ்கான் கோவில், பல இரயில்கள், ஐ.ஐ.எஸ்ஸி பெங்களூர், ஹைதராபாத், இன்னும் பல டஜன் இடங்களில் குண்டு வெடித்த போதெல்லாம் சிங்கத்தின் காதுகளில் சன்னமாகக் கூட அந்த வெடிச்சப்தம் விழவே இல்லை. வெடிச் சப்தமே விழாதபோது எப்படி மரண ஓலங்களும், கதறி அழுத மனைவியர், அநாதையான குழந்தைகளின் விக்கித்து காற்றில் கரைந்த கதறல்கள் எல்லாம் சொகுசுப்படுக்கையறையின் ஒலி தடுப்புக் கதவுகளினூடே எப்படி நுழையும்?

பாராளுமன்றத்தில், இவரைப் போன்ற உணவுப் பிரமிடின் உச்சத்தில் இருக்கும் அரசியல்வாதிகளைக் காப்பாற்ற, தம் நல்லுயிர் நீத்த ராணுவ வீரர்களின் விதவைகளின் 'என் கணவரின் ஆன்மா சாந்தி அடையவாவது, என் கணவரின் வீர மரணத்தை கோமாளித்தனமாக்காமல் இருப்பதற்காகவது அப்ஸல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நிறைவேற்றுங்கள்' என்ற குரலெல்லாம் கேட்கும்?

அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்திற்குத் திடீரென அந்தத் தூக்கமும் திருப்திகரமானதாக இல்லை. குண்டு வெடித்தபோதெல்லாம் கூட நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்துக்கு , சிறுபான்மையினர் வெடிகுண்டு வைத்ததற்காக கைதான போதெல்லாம் தூக்கம் வராமல் போனது. குளிர்சாதனப் பெட்டி வைத்தாலும், வெது வெதுப்பாக்க வெப்பமூட்டினாலும் தூக்கம் வரவில்லை. காஷ்மீர செம்மறியாடுகளிடம் இருந்து சுத்தமாக மொட்டையடித்து, மழித்தெடுக்கப்பட்ட கம்பளியால் ஆன சால்வையை போர்த்தினால் மட்டும் ஏதோ ஒரளவுக்குத் தூக்கம் வந்தது. சற்றே தூக்கமின்றி அவதிப்பட்ட சிங்கம் ஒரு சமயத்தில் சிறிதளவும் தூக்கமில்லாமல் தவித்துப்போனதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்தது.. திடீரென இப்படி ஆனதற்குக் காரணம் வேறேதுமேயில்லை; க்ளாஸ்கோ விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்தவரின் ஒன்றுவிட்ட அண்ணனான, டாக்டர் முகமத் ஹனிஃப் ஆஸ்திரேலியாவில் கைது செய்யப் பட்டு விசாரிக்கப் படுகிறார் என்பதுதான். தூக்கமில்லா வியாதிக்கு என்ன மருந்து என்று கண்டுபிடிக்க மருத்துவ வல்லுனர்கள் மண்டையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு வரலாறு சற்று நினைவிருந்தால் தூக்கம் வருவதற்கான வழியைக் கண்டு பிடித்துவிடலாம். அதற்கு ஐம்பது வருடங்களுக்கு முன் செல்ல வேண்டும்.


நம் அரசியல்வாதிகளுக்கு, அதிலும் காங்கிரஸாருக்கு ஒரு தனிப்பெரும் சிறப்புண்டு. அது நம்பிக்கை துரோகத்தில் ஹாட்ரிக் மட்டுமல்ல, சென்ட்சுரியும் அடித்தவர்கள் காங்கிரஸார் என்பதே. நேதாஜிக்கு துரோகம் செய்து அவரை அநாதை போல நடத்தி, சுதந்திரத்துக்கு முந்தைய ராணுவமான சுபாஷ் சந்திர போஸின் INA வீரர்களுக்கு துரோகம் செய்தது; அவர் எங்கு இருந்தார், எங்கு இறந்தார் என்பதைக் கூட மக்களிடம் இருந்து மறைத்து மக்களுக்குத் துரோகம் செய்தது; சீன படையெடுப்பின் போது தகுதிக் குறைவான PN தாப்பருக்கு ராணுவத் தலைமைப் பதவி கொடுத்து, திறமை மிக்க லெஃப்டினென்ட் ஜெனரல் J.N சௌத்ரி, சாம் பகதூர் மேனக்ஷா, SPP தோரட் ஆகியோருக்கு துரோகம் செய்தது; எந்த மாதிரியான ராணுவ நடவடிக்கைகளை எடுக்கக்கூடாதோ, எதைச் செய்யக் கூடாதோ அதை மட்டும் செய்து மக்களுக்கு, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு, நாட்டின் இறையாண்மைக்கு துரோகம் செய்தது; போரின் முடிவில் பாராளுமன்றத்திலேயே நாகூசாமல் 'இழந்த பல ஆயிரம் மைல்களும் வெறும் பொட்டல் காடுதான்' என்று சொல்லி அந்த நிலத்தில் ரத்தம் சிந்தி, குளிரில் விறைத்த வீரர்களுக்கும், பாரதத் தாய்க்கும் துரோகம் செய்தது; இழந்தவை போதாது என்று இராணுவ தலைமை PN தாப்பருக்கும் அவமானப்படுத்தி வெளியேற வைத்து துரோகம் செய்தது; அதிகார போதையில் இப்படி நீளும் துரோக லிஸ்டைச் செய்த பாட்டடனார் நேருவுக்கு சளைத்தவரா பேரன் ராஜீவ்? அருணாசலப் பிரதேசத்தின் பல ஆயிரம் மைல்களை கம்யூனிஸ்டுகள் அகமகிழ, ஏதோ பாட்டனார் நேரு சம்பாதித்த சொத்துப்போல் சீனாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து துரோகம் செய்தது; (ஒரே வித்தியாசம், பாட்டடன் விட்டது பொட்டல் காடு; பேரன் கொடுத்தது பல ஆயிரம் சதுர மைல்கள் டார்ஜிலிங் தேயிலை துளிர்க்கும் வளமான பொன் விளையும் பூமி) அமைதிப் படையை இலங்கைக்கு அனுப்பி, இலங்கைத் தமிழரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தது என துரோகத்தின் பரம்பரையாகவே இருக்கிறது காங்கிரஸ்;


இதே காங்கிரஸ் வழிவந்த மன்மோகன சிங்கம் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, நம்பிக்கை துரோகத்திலும் டாக்டர் பட்டம் வாங்கத் தகுதி உள்ளவரே. இதனால்தான் பாராளுமன்றத் தாக்குதலில் இவரைப் போல காங்கிரஸின் அமைச்சர்களின், அரசியல்வாதிகளின் உயிரைக் காக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த இராணுவ வீரர்களுக்கும், அவர்களை இழந்த விதவைகளுக்கும் துரோகம் செய்துள்ளது. நாட்டுக்காக உயிரைத் தியாகம் செய்த வீரர்களை முட்டாள்களாக்கி, சிறுபான்மையினரின் ஓட்டுக்காகத் தாய் நாட்டுக்கே துரோகம் செய்யும் மன்மோகன் சிங்கின் கலைந்த தூக்கம் இன்னும் சரியாகவில்லை.

2)மாலேகனுக்கும் மும்பைத் தாக்குதலுக்கும் இடையில் :

இப்படித் தூக்கம் கெட்டு மசமசவென இருந்த சிங்கம், போனவாரம் நடந்த பயங்கரவாத ஒழிப்பு மாநாட்டில் திடீரென புத்துணர்ச்சியோடு வீறு கொண்டு எழுந்துள்ளது. மேலும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. நேருவின் திருவடியைப் பின்பற்றி ராணுவ அதிகாரிகளின் மேல் பழிசுமத்தி தன் துரோகத் திறமையை பறைசாற்ற சிங்கம் முடிவுடன் இருக்கிறது. அதற்கான செயல்கள்தான் இவை :

மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti Terrorism Squad) ஸ்ரீகாந்த் புரோகித் என்ற ராணுவ உளவுத்துறை அதிகாரியை கைது செய்து விசாரணை செய்து கொண்டிருக்கின்றது. இந்த ATS சின் முதல் கண்டுபிடிப்பு : ஸ்ரீகாந்த் புரோகித், இராணுவத்தில் இருந்து 60 கிலோ RDX வெடி மருந்தைத் திருடி பிப்ரவரி 17 2007 ல் சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிக்க வைத்து 68 பிரயாணிகளைக் கொன்றார். ATS இந்த கண்டுபிடிப்பை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. அப்படி சமர்ப்பித்தால் நம்பிக்கை துரோகம் திருப்திகரமாக அமையாது; அது மட்டுமின்றி நீதிபதி ஸ்ரீகாந்த் புரோகித்தை விடுவிக்கக் கூடும். இதனால் மக்கள் தீர்ப்பே மஹேசன் தீர்ப்பு என பத்திரிகைகளுக்கு செய்தியாக வழங்கியது. பத்திரிகைகளும் சுடச்சுட மக்களுக்கு விருந்தளித்தன.

ATS சின் இந்தக் கண்டுபிடிப்புக்கு குறைந்தபட்சம் மூன்று அடிப்படை நிகழ்ச்சிகள் நடந்து இருக்க வேண்டும்.
(1) இராணுவ கிடங்கில் 60 கிலோகிராம் RDX வெடிபொருள் பிப்ரவரி 2007க்கு முன் காணாமல் போய் இருக்க வேண்டும்.
(2) இரயில் வெடிப்பின் போது பயன் பட்டது RDX வெடி பொருளாக இருந்திருக்க வேண்டும்.
(3) ஸ்ரீகாந்த் புரோகித் தான் அதைச் செய்தார் என்று ஆதாரமோ அல்லது குறைந்தது அனுமானமோ செய்யத் தகுந்த காரணி இருக்க வேண்டும்.

இதில் ஏதேனும் ஒன்று அல்ல, மூன்றுமே உண்மையாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே ATS, ஸ்ரீகாந்த் புரோகித்தை கைது செய்ய முடியும். அவ்வாறு இல்லாதவரை சந்தேகிக்கலாம்; அவ்வளவுதான். அதை நீதிமன்றத்தில் நிரூபித்த பின்னரே பத்திரிகையாளர்களிடம் வெளியிட முடியும். ஆனால் இந்த மூன்றில் ஒன்றைக்கூட ATS -இனால் நிரூபிக்க முடியவில்லை. ஆனால் இதை பத்திரிகையாளரிடம் வெளியிட்டு ராணுவ வீரர்கள அவமானப் படுத்தியது மூலம், ATS ( Apparent Treason Squad?!) தான் ஒரு காங்கிரஸ் வழிநடக்கும் விசுவாசப் படை என்று நிரூபித்து விட்டது.

பாவம், தடய நிபுணர்கள் சம்ஜாவ்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பில் பயன் படுத்தப் பட்டது RDX வெடிப் மருந்து அல்ல என்று எப்போதோ சொல்லிவிட்டது ATS - க்கு இப்போதுதான் தெரியவந்தது போலும். உடனே கொஞ்சமும் நாகூசாமல் 'அப்டீன்னா, அது இல்ல.. இந்த சாத்வியும், புரோகித்தும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களை கொல்லப் பாத்தாங்க..அவங்களே சொன்னாங்க தெரியுமா?' என்று இப்போது சொல்கிறது. இது சற்றும் வெட்கமில்லாமல் குற்றச்சாட்டை மாற்றுகிறது என்பதைவிட, வெள்ளைக்காரன் சொன்னானே 'இந்தியர்களான நீங்கள் ஆட்டு மந்தைகள்; நாங்கள் என்ன சொன்னாலும் தலையாட்டுவீர்கள்' என்பது போலத்தான் இருக்கிறது. ATS சின் இந்த இரண்டாவது கண்டுபிடிப்புக்கும் எந்த ஆதாரமும் இல்லை. இன்னொரு பரிதாபம் என்னவென்றால் குற்றச்சாட்டுக் கற்பனைகள் அவர்களுக்கே திருப்தியாக இல்லையோ என்னவோ. அதனால்தால் 'உண்மை கண்டு பிடிக்கும் சோதனையில் எதுவும் தெரியவில்லை. அதனால் இன்னொரு முறை செய்வோம்' என்று புது குற்றச் சாட்டுகளை கற்பனை செய்ய அவகாசம் ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கற்பனையில் உருவானது தான் ' இன்டர்நெட்டில் ஜிகாதிகளின் வெப்சைட்டை பார்த்தார்; இல்லை இல்லை.. இவர்கள் பாகிஸ்தானிய ஜிகாதிகளுக்கு ஆயுதம் கொடுத்துள்ளனர்' என்பதெல்லாம். ஒரு இன்டெலிஜென்ஸ் துறை அலுவலர், தீவிரவாதத்தைத் தடுக்க ஜிகாதிகளின் வெட்சைட்களைப் பார்க்காமல் வேறு என்ன செய்வார் ?

ஸ்ரீகாந்த் புரோகித்தோ 'நாங்கள் சொல்வதையெல்லாம் ஒப்புக் கொண்டதாக கையெழுத்துப் போட்டுவிடு இல்லாவிட்டால் என்கௌன்டர் என்று சொல்லி கொன்று விடுவோம்' என்று ATS மிரட்டியதாக சொல்கிறார். சாத்விக்கும் இதே நிலைதான். சரி இவர்கள் இருவருமே குற்றவாளிகளாகவே இருக்கட்டும். இந்த விசாரணைகளை காதும் காதும் வைத்தாற்போல் நடத்தி உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அதுவரை கண்ணியம் குறையாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால் அதைச் செய்யாமல் தினமும் பத்திரிகையாளர்களுக்கு செய்தி வழங்கிக் கொண்டிருக்கக் கூடாது.


இப்போது ஏதோ பூரான் காதில் புகுந்தது போல் துள்ளி எழுந்த மன்மோகன சிங்கம் இப்போது பேசியதில் இருந்து விவகாரமான ஒரு பகுதி(தினமலர் , நவம்பர் 22 ) :

"இந்தியாவில் இருந்து தீவிரவாதத்தை அடியோடு அறுத்தெறிய வேண்டும். வெளிநாடுகளை இனியும் குறைசொல்லி பிரயோஜனம் இல்லை. தீவிரவாதம் இந்தியாவில் இருந்தே தோன்றுகின்றது. தீவிரவாதிகள் சற்றும் பாரபட்சமில்லாமல் கருணைகாட்டாமல், பச்சதாபம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும்".

இவ்வாறாக 'இந்தியாவிலிருந்துதான் தீவிரவாதம் ஆரம்பிக்கிறது' என்று உளறியதன் பின்விளைவுபற்றி ஒரு பிரதம மந்திரி சிந்தித்துதான் பேசுகிறாரா என்ற சந்தேகமும் எழுகிறது. பாகிஸ்தான் இவரது பேச்சை ஐ.நா விலோ, அமெரிக்கப் செனட்டிலோ சமர்ப்பித்து 'இந்தியாவின் பிரதமரே சொல்லிவிட்டார், பாகிஸ்தான் மீது எந்த குற்றமும் இல்லை, நாங்கள் ஒரு பாவமும் அறியாதவர்கள், பெனாசிர் பூட்டோ கொலைக்கே இந்தியாதான் காரணம் என்று நாங்கள் சந்தேகப்படுகிறோம்' என்றுகூட சொல்ல முடியும்(அமெரிக்கர்கள் நம்பிவிடப் போவதில்லை என்றாலும். இவ்வளவு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் பிரதமர் பேசக் காரணம் என்ன? போன வருடம் இரயில் வெடிகுண்டில் நூறு பேர் இறந்தபோது வராத வீரம் இப்போது மாலெகான் வெடிகுண்டில் ஆறு பேர் இறந்தவுடன் வரக் காரணம் என்ன?

திடீரென்று சிங்கத்தின் வீரம் பொங்கி எழக் காரணம் என்னவென்று சிந்தித்தால் புரிகிறது: இப்போது முதல் முறையாக ஹிந்துக்கள் சந்தேகத்தில் விசாரிக்கப் படுகிறார்கள். ஹிந்துக்கள் குற்றவாளிகளாக நிரூபிக்கப் பட்டுவிட்டால், பிஜேபி மேலும் பழியைப்போட்டு தேர்தலில் வெல்ல வாய்ப்பை உருவாக்க முயற்சி செய்யலாம். எல்லா தீவிரவாதத்துக்கும் காரணம் ஹிந்துக்களே என்று பழி சுமத்தினால் சிறுபான்மையினர் மனம் நெகிழக்கூடும்.

ஆட்சியைப் பிடிப்பதற்காக இந்திய ராணுவத்தின் மீதே குற்றம் சொல்ல மஹாராஷ்ட்ர அரசும் துணிந்திருக்கிறது. இதன் பக்க விளைவாக, ஒரு பாமர மனிதன் கூட இந்திய நாட்டின் மீது நம்பிக்கை இழந்துவிடுவான்; இஸ்லாமியர், அவர்கள் ஒடுக்கப் படுவதாகவும், இஸ்லாமிய தீவிரவாதிகள் மீது சுமத்தப்படும் பழி பொய்யானது என்றும் முடிவு செய்து பாரதத்தின் ஒருமைப்பாடு மீது நம்பிக்கை இழப்பர். இராணுவ வீரர்களும் இதன் மூலம் கடுமையாக மன உளைச்சலுக்கும், குழப்பத்திற்கும் உள்ளாவர். தாங்கள் 'எதற்காக பனியிலும், குளிரிலும், இரவிலும், பகலிலும் பாடுபடுகிறோம்? தாய்த்திருநாட்டுக்கா அல்லது இந்த அரசியல்வாதிகள் நம்மை சதுரங்கக் காயாக உபயோகிக்கவா?' என்ற குழப்பம் அவர்களின் அர்ப்பணிப்பை தோற்கடித்துவிடும். இதனால் நாட்டின் சகோதரத்துவமும், இணக்கமும் பாதிக்கப்படும் என்று காங்கிரஸாருக்கு புரியாமல் இல்லை. அவர்களுக்குத் தேவை தேர்தலில் வெற்றி. அவ்வளவுதான். அதற்காக எதையும் செய்யத் துணிந்துவிட்டனர். மஹாராஷ்ட்ர காங்கிரஸாரின் இந்தச் செயல், ஆட்சியைப் பிடிப்பதற்கான மன்மோகன் சிங்கின் இந்தப் பேச்சு, பாகிஸ்தானுக்கு தோதாக அமையக்கூடிய இந்தப் பேச்சு ஒரு வகையில் தேசத்துரோகமே.

டாக்டர் ஹனிப் முகம்மதின் விசாரணையின் போது தூக்கத்தை இழந்த சிங்கம் இனிமேல் நன்றாகத் தூங்கும். சாத்வி ப்ரக்ஞா வை விசாரிக்கும் முறை சரியில்லை, பலமுறை Narco சோதனை முறை உடல் நலனுக்கு நிரந்திரமாக கேடு விளைவிக்கக் கூடியது என்று என்றெல்லாம் எழும் குரல்கள் சிங்கத்தின் காதுகளில் விழவே விழாது. வேண்டுமானால் பாருங்கள், இனி அடுத்தமுறை இஸ்லாமிய தீவிரவாதிகள் பிடிபடட்டும். 'இந்தியாவிலிருந்துதான் தீவிரவாதம் ஆரம்பிக்கிறது' என்று பேசிய இதே பிரதமர் அப்போது 'இதற்குக் காரணம் எல்லை தாண்டிய சக்திகள், இந்திய முஸ்லீம்களை இதில் குறை சொல்லவே முடியாது' என்பார்.

இத்தகைய முறை செய்யா ஆட்சிக்குத் தண்டனை அளிக்கும் வாக்களிப்பு அதிகாரம் மக்களிடம் உள்ளது. பயன்படுத்துவார்களா மக்கள்?

3)மும்பைக்குப் பின்:

1)இந்தக் கட்டுரையை பிரசுரத்துக்கு சமர்பிக்கும் முன்பு அச்சுத் திருத்தமும், சரிபார்த்தலும் செய்து கொண்டிருந்த போது, மும்பையில் பயங்கரவாதிகள் மிகப் பெரும் தாக்குதல் நடத்தி நூற்றுக்கு மேற்பட்டவற்களைக் கொன்றதாக செய்தி வந்துள்ளது; கட்டுரையில் குறிப்பிட்டது போலவே பிரதமர் மன்மோகன் சிங் 'இது வெளிநாட்டுத் தீவிரவாதிகளின் தாக்குதல்' என்று சொல்லியிருக்கிறார். இனி வழக்கம் போல அமெரிக்காவிடம் புலம்பிவிட்டு காணாமல் போன தூக்கம் கிடைத்த தெம்பில் தூங்கலாம். வழக்கம் போல பாகிஸ்தான் அமெரிக்காவிடம் பயந்து கொண்டு சிலரை வீட்டுக்காவலில் வைக்கும். இந்தியாவிடம் ஆதாரம் கேட்கும்

2) CNN தொலைக்காட்சியில் பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஹுசைன் ஹக்கானி 'எங்கள் பிரதமர் ஆளுங்கட்சி தலைவியிடமே பேசிவிட்டார்(பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இல்லை). பாகிஸ்தான் மேல் எந்தப் பொறுப்பும் இல்லை என்று விளக்கிவிட்டார்' என்று பேட்டி அளித்தார்.

3) ATS தலைவர் ஹேமந்த் கர்காரே, தாக்குதல் நடந்து கொண்டிருந்தபோதே, அவசர அவசரமாக காயமடைந்த போலீஸ் அதிகாரி சதானந்தை சந்திக்க காமா மருத்துவமனைக்குச் சென்றிக்கிறார்; போகும் வழியிலேயே தீவிரவாதிகளால் சுடப்பட்டு இறந்ததார் என கூட பயணித்த காவலர் அருண் ஜாதவ் தெரிவித்துள்ளார்.

4)மும்பையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளைஞர் கூடி கேட் வே ஆஃப் இந்தியாவுக்கு 'அமைதி நடை' செய்துள்ளனர். பெரும்பாலான பேனர்கள் சிவ சேனாவையும், ராஜ் தாக்கரேவையும் எதிர்ப்பதாக இருந்தன. இந்த தாக்குதலுக்கு ஹிந்துக்களே காரணம், 'அதனால் பிஜேபியைத் தோற்கடியுங்கள்' என்று வோட்டுப்பதிவுக்கு முன் விளம்பரம் செய்வது போல் இருந்தது அந்த அமைதி நடை.

5)மூன்று சட்ட சபைகளுக்கு காங்கிரஸை தேர்ந்தெடுத்து 'ஆட்டுமந்தைகள்' என மக்கள் நிரூபித்துள்ளனர்.